அ
- அகுமதிய்யா முசுலிம் சமூகம்
ச
- சியா இசுலாம்
- சுன்னி இஸ்லாம்
த
- தாவூதி போரா
அகுமதிய்யா முசுலிம் சமூகம் அல்லது அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா (Ahmadiyya Muslim Community, Jama'at Ahmadiyya, அரபு மொழி: الجماعة الأحمدية المسلمة, al-Jamā'a al-Ahmadīya al-Muslima, உருது: احمدیہ جماعت) என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட காதியானிகள் இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).[1]
இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது[மேற்கோள் தேவை]. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.
இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சுன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது[மேற்கோள் தேவை]. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
சியா இசுலாம்
அடிப்படை நம்பிக்கைகள் |
அல்லா • ரசூல் (சல்) மலக்குகள் • இறைதூதர்கள் இறை வேதங்கள் மறுமை • கலாகத்ர் |
கட்டாயக் கடமைகள் |
இறை நம்பிக்கை • தொழுகை நோன்பு • ஜக்காத்து • ஹஜ்ஜு |
இசுலாமிய வரலாறு |
இஸ்லாமிய வரலாறு • சஹாபா ரசூத்தீன் கலிபாக்கள் ஷியா இமாம்கள் |
நூல்களும் சட்டங்களும் |
குர்ஆன் • ஹதீஸ் |
இஸ்லாமிய பிரிவுகள் |
சன்னி • சியா |
பண்பாடு |
கலை • நாள்காட்டி • குழந்தைகள் மக்கள் பரவல் • பண்டிகைகள் மசூதிகள் • மெய்யியல் அரசியல் • அறிவியல் • பெண்கள் • ஸல் |
பா • உ • தொ |
ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் அரபு மொழி சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகனான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து சதவீதத்தினரான ஷியா முஸ்லிம்கள். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான். சுன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] வேறுபாடு
அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சுன்னிகளுக்கும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.
[தொகு] ஜகாத்
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.[தொகு] முஹர்ரம்
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள்.[தொகு] இந்தியாவில்
இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை குறைவு. உத்தரப் பிரதேசம், காஷ்மீரில், ஆந்திரம், தமிழகத்தில் எனப் பிரிந்துள்ளனர்..தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது.
சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருது. தமிழ் குறைவானவர்களுக்கே தெரிந்துள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
சுன்னி இஸ்லாம்
அடிப்படை நம்பிக்கைகள் |
அல்லா • ரசூல் (சல்) மலக்குகள் • இறைதூதர்கள் இறை வேதங்கள் மறுமை • கலாகத்ர் |
கட்டாயக் கடமைகள் |
இறை நம்பிக்கை • தொழுகை நோன்பு • ஜக்காத்து • ஹஜ்ஜு |
இசுலாமிய வரலாறு |
இஸ்லாமிய வரலாறு • சஹாபா ரசூத்தீன் கலிபாக்கள் ஷியா இமாம்கள் |
நூல்களும் சட்டங்களும் |
குர்ஆன் • ஹதீஸ் |
இஸ்லாமிய பிரிவுகள் |
சன்னி • சியா |
பண்பாடு |
கலை • நாள்காட்டி • குழந்தைகள் மக்கள் பரவல் • பண்டிகைகள் மசூதிகள் • மெய்யியல் அரசியல் • அறிவியல் • பெண்கள் • ஸல் |
பா • உ • தொ |
சுன்னி இஸ்லாம் (Sunni Islam) என்பது இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இஸ்லாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி (ஸல்) அவர்கள், அதன் பொருட்டு இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமிய பேரரசை நிறுவினார்கள். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார்கள். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு உமர் (ரலி) என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு முகம்மது நபியின் கீழ் பேரரசு, 622-632 ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661 உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750
634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு அலீ (ரலி) என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலி (ரலி) அவர்களை விட மூத்தவரான உதுமான் (ரலி) என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலி (ரலி) அவர்களின் சம்மதத்தோடு உதுமான் (ரலி) அவர்கள் மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உஸ்மான் (ரலி) அவர்களின் மறைவுக்கு பிறகு அலி (ரலி) அவர்கள் நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலி (ரலி) அவர்களை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.
[தொகு] நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்.
உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் (ரலி) காலத்தது
சுன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லாஹ் கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி. அலி (ரலி) அவர்கள் ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.
[தொகு] சட்ட தொகுப்புகள்.
இச்சட்ட தொகுப்புகளை இயற்றியவர்கள் எட்டாம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களாகும். இவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்லாம் பரவலாக வியாப்பித்திருந்ததாலும், நேரடியாக சமய சட்டங்களைப் பெறுவதில் அக்காலத்தைய தூர பிரதேச மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாலும் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்த மார்க்கம் கற்றறிந்த அறிஞர்கள் திருக்குர்ஆன் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழிகாட்டல்களிலிருந்தும் சட்டங்களை தொகுத்து வழங்கும் தன்னலம் கருதாத சேவைகளை செய்தனர். இவ்வாறான சட்ட தொகுப்பாளர்கள் நால்வர் இன்றும் அனைத்து முஸ்லிம்களாலும் மதிக்க கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய சட்டத்தொகுப்புகளாவன; ஹனபி, ஷாபி, மாலிக்கி மற்றும் ஹம்பலி என்பனவைகளாகும். இச்சட்டத் தொகுப்புகள் அரபியில் மத்ஃகப்(المذاهب) என அழைக்கப்டுகின்றன.
ஹனபி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு 702-ல் இராக்கில் பிறந்த "இமாம் அபூ ஹனிபா" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.
"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை."[1]. அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள்! [2]
இந்த மத்ஹப் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், துருக்கி, இராக், ரஷ்யா, மத்திய ஆசிய மற்றும் பால்கன் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.
ஷாபி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "முகம்மது இப்னு இத்ரிஸ் அஸ்-ஷாபி" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.[3]. ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை” என்று முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுள்ளனர்.[4].
இது இந்தோணேசியா, கீழை எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, ஜோர்டன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாட்டில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது. மேலும் இந்த மத்ஹப் திருமறையில் உள்ள ஷரியத் முறையை மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிறது.
மாலிக்கி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "மாலிக் இப்னு அனஸ்" என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் முகம்மது நபி (சல்) அவர்களின் இறுதி காலத்தில் அவர்களோடு இருந்த தோழர்கள் அறிவித்தவைகளைக் கொண்டு "முவத்தா" என்ற நூலை தொகுத்தார். இத்தொகுப்பு இஸ்லாத்தின் மிக பழமையான ஒன்றாகும். இதில் இருந்தே இவர் மாலிக்கி மத்ஃகபை தொகுத்தார். இவ்வாறு தொகுத்த தமது சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.
"நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான், எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்."[5]
இந்த மத்ஹப் கீழை எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை தவிர மற்ற அனைத்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள முஸ்லிம்களாலும் பின்பற்றப்படுகிறது.
ஹம்பலி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "அஹம்மது இப்னு ஹம்பல்" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.
"என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்!"[6]இது அரேபிய தீபகற்பத்தில் உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.
மேற்கண்டவாறு சுன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன.
[தொகு] மக்கள்தொகை
மக்கள்தொகையை பொறுத்தவரை சுன்னி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் ஈரான், இராக், லெபனான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ அல்இன்திகா பக்கம் 145;####ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 6 பக்கம் 293;#### ரஸ்முல் முப்தீ. பக்கம் 29, 32.
- ↑ ஈகாழுல் ஹிமம், பக்கம் 50.
- ↑ தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3, பக்கம் 15;///#### ஈகாழுல் ஹிமம் பக்கம் 100
- ↑ ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
- ↑ ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2, பக்கம் 42; /####உஸுலுல் அஹ்காம், பாகம் 6, பக்கம் 149;//####ஈகாழுல் ஹிமம் , பக்கம் 72.
- ↑ ஈகாழுல் ஹிமாம், பக்கம் 113.
- Sunna - Definitions from Dictionary.com
- Josef W. Meri, Medieval Islamic Civilization: An Encyclopedia, 1 edition, (Routledge: 2005), p.5
- Hisham M. Ramadan, Understanding Islamic Law: From Classical to Contemporary, (AltaMira Press: 2006), p.26
- Bülent Þenay. "Ash'ariyyah Theology, Ashariyyah". 'BELIEVE Religious Information Source'. Retrieved on 2006-04-01.
- "Maturidiyyah". 'Philtar'. Retrieved on 2006-04-01.
- Reported by ibn al-Jawzi in Manaaqib Imam Ahmad, pg. 155-156.
[தொகு] வெளி இணைப்புகள்
உலகின் கோடீஸ்வர சமூகங்களில் ஒன்று தாவூதி போரா முஸ்லிம் சமூகம். வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் போரா முஸ்லிம்கள், கலாசாரத்தில் தனித்தன்மை பெற்றவர்கள். இது, நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற சமூகமும்கூட. 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்.
[தொகு] மக்கள்தொகை
உலகம் முழுவதும் உள்ள 10 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்களில், சுமார் 9 லட்சம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் இரண்டாயிரம் குடும்பங்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரண்டாயிரம் குடும்பங்களும் வசிக்கின்றன.
[தொகு] மூலம்
நான்கு நூற்றாண்டுகள் போரா முஸ்லிம்களின் பீடமாகவும், தாயகமாகவும் இருந்தது யேமன். அங்கிருந்துதான் 700 ஆண்டுகளுக்கு முன் போரா முஸ்லிம்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக, மும்பைக்கு வந்தனர். இவர்களது ஜமாஅத் பெயர் அஞ்சுமன்-னே-நஜ்மி. 25-வது மத குருவில் இருந்து இந்தியாவில் இம் மதப் பிரிவினரின் சரித்திரம் தொடங்குகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் போரா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கிருப்பவர்களும்கூட இந்தியாவில் இருந்து சென்றவர்கள்தான்.
[தொகு] நிறுவனங்கள்
போரா முஸ்லிம்களின் சர்வதேசத் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். தாய் மொழி குஜராத்தி. அரபி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் உண்டு.
சென்னையில் உயர் நீதிமன்றத்துக்கு எதிரே பிரம்மாண்டமாக அமைந்துள்ளது போரா முஸ்லிம்களின் மசூதி.
கூடி வாழ்வது, இவர்களின் சிறப்பு. கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சாலையில் "புர்ஹானி நகர்' என்ற தனிக் குடியிருப்பே உள்ளது. இவர்களது மசூதி "அல் குத்பி அல் மஸ்ஜித்' என அழைக்கப்படுகிறது.இவர்களது உலக மத குரு தை அல்- முத்லக் என அழைக்கப்படும் டாக்டர் சையத்னா முஹம்மது புர்ஹானுதீன் சாஹிப். 52-வது போரா மத குருவான இவருக்கு வயது 91. இவர் பிறந்தது சூரத்தில். ஆரம்பக் கல்வியைத் தந்தையும், 51-வது மத குருவுமான சையத்னா தாஹிர் சைபுதீன் சாஹிப்பிடம் கற்றார்.
தந்தையின் நினைவாக இவர் உருவாக்கிய டாக்டர் சையத்னா தாஹிர் சைபுதீன் நினைவு அறக்கட்டளையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
70-களில் மும்பையில் புர்ஹானி வணிகவியல், கலைக் கல்லூரியை இவர் தோற்றுவித்தார். இன்று இவரது நிர்வாகத்தின் கீழ் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
91-ல் சையத்னாவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, விழிப்புணர்வை வளர்க்க புர்ஹானி பவுண்டேஷன் (இந்தியா) நிறுவப்பட்டது. 99-ல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார் சையத்னா. "நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ, அந்தத் தேசத்துக்கு உண்மையாக இருங்கள்' என்பதே போரா முஸ்லிம்களுக்கு இவர் வலியுறுத்தும் நெறி.
[தொகு] அழகிய கடன்
"புர்ஹானி கரசன் ஹசன்னா' என்ற டிரஸ்ட் மூலமாக தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. கரசன் ஹசன்னா என்றால் வட்டியில்லாக் கடன் என்று பொருள். அதாவது, இறைவழியில் அழகிய கடன் என்று பொருள்.ஆயிரக்கணக்கான போரா முஸ்லிம்கள் தொழிலிலும் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்க இந்த வட்டியில்லாக் கடன் உதவுகிறது.இந்த டிரஸ்ட்டை ஒரு குழு நிர்வகிக்கிறது. மாதந்தோறும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக இதற்குச் செலுத்த வேண்டும்.
மூன்று மாத சந்தா செலுத்திய பிறகு, செலுத்திய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை கடன் பெறலாம். கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப 10 முதல் 20 சம தவணைகள் என திருப்பிச் செலுத்தும் காலக் கெடு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் தவணையுடன் மாத சந்தாவையும் அவர் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும்.
[தொகு] பெண்களுக்குச் சம உரிமை
இப் பிரிவு முஸ்லிம்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் தொழும் அதே நேரத்தில் அதே மசூதியில், ஆனால் தனி இடத்தில் பெண்களும் தொழுகிறார்கள்.
[தொகு] தனி வெண்ணிற உடை
தொழுகைக்கு ஆண்கள் தூய வெள்ளையில் குர்தா, பைஜாமா, மேல் கோட் போன்ற சாயா ஆடையும், தொப்பியும் அணிந்து வர வேண்டும்.
15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக "ரிதா' எனப்படும் புர்கா அணிய வேண்டும். ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட எல்லா இஸ்லாமியப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். மொஹர்ரம் இவர்களுக்கு சிறப்புக்குரிய பண்டிகை. ஆண்டுதோறும் மதகுரு சையத்னாவின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
[தொகு] மும்பை செல்லும் ஜகாத்
ஈட்டும் வருவாயில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குத் தர வேண்டிய வரி (ஜகாத்). இது வசூலிக்கப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தேவை அடிப்படையில் பல இடங்களுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.
[தொகு] மக்கள்தொகை
உலகம் முழுவதும் உள்ள 10 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்களில், சுமார் 9 லட்சம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் இரண்டாயிரம் குடும்பங்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரண்டாயிரம் குடும்பங்களும் வசிக்கின்றன.[தொகு] மூலம்
நான்கு நூற்றாண்டுகள் போரா முஸ்லிம்களின் பீடமாகவும், தாயகமாகவும் இருந்தது யேமன். அங்கிருந்துதான் 700 ஆண்டுகளுக்கு முன் போரா முஸ்லிம்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக, மும்பைக்கு வந்தனர். இவர்களது ஜமாஅத் பெயர் அஞ்சுமன்-னே-நஜ்மி. 25-வது மத குருவில் இருந்து இந்தியாவில் இம் மதப் பிரிவினரின் சரித்திரம் தொடங்குகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் போரா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கிருப்பவர்களும்கூட இந்தியாவில் இருந்து சென்றவர்கள்தான்.[தொகு] நிறுவனங்கள்
போரா முஸ்லிம்களின் சர்வதேசத் தலைமையகம் மும்பையில் உள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாகவும் இதர மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். தாய் மொழி குஜராத்தி. அரபி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் உண்டு.சென்னையில் உயர் நீதிமன்றத்துக்கு எதிரே பிரம்மாண்டமாக அமைந்துள்ளது போரா முஸ்லிம்களின் மசூதி.
கூடி வாழ்வது, இவர்களின் சிறப்பு. கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சாலையில் "புர்ஹானி நகர்' என்ற தனிக் குடியிருப்பே உள்ளது. இவர்களது மசூதி "அல் குத்பி அல் மஸ்ஜித்' என அழைக்கப்படுகிறது.இவர்களது உலக மத குரு தை அல்- முத்லக் என அழைக்கப்படும் டாக்டர் சையத்னா முஹம்மது புர்ஹானுதீன் சாஹிப். 52-வது போரா மத குருவான இவருக்கு வயது 91. இவர் பிறந்தது சூரத்தில். ஆரம்பக் கல்வியைத் தந்தையும், 51-வது மத குருவுமான சையத்னா தாஹிர் சைபுதீன் சாஹிப்பிடம் கற்றார்.
தந்தையின் நினைவாக இவர் உருவாக்கிய டாக்டர் சையத்னா தாஹிர் சைபுதீன் நினைவு அறக்கட்டளையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
70-களில் மும்பையில் புர்ஹானி வணிகவியல், கலைக் கல்லூரியை இவர் தோற்றுவித்தார். இன்று இவரது நிர்வாகத்தின் கீழ் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
91-ல் சையத்னாவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, விழிப்புணர்வை வளர்க்க புர்ஹானி பவுண்டேஷன் (இந்தியா) நிறுவப்பட்டது. 99-ல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்றார் சையத்னா. "நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ, அந்தத் தேசத்துக்கு உண்மையாக இருங்கள்' என்பதே போரா முஸ்லிம்களுக்கு இவர் வலியுறுத்தும் நெறி.
[தொகு] அழகிய கடன்
"புர்ஹானி கரசன் ஹசன்னா' என்ற டிரஸ்ட் மூலமாக தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. கரசன் ஹசன்னா என்றால் வட்டியில்லாக் கடன் என்று பொருள். அதாவது, இறைவழியில் அழகிய கடன் என்று பொருள்.ஆயிரக்கணக்கான போரா முஸ்லிம்கள் தொழிலிலும் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்க இந்த வட்டியில்லாக் கடன் உதவுகிறது.இந்த டிரஸ்ட்டை ஒரு குழு நிர்வகிக்கிறது. மாதந்தோறும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக இதற்குச் செலுத்த வேண்டும்.மூன்று மாத சந்தா செலுத்திய பிறகு, செலுத்திய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை கடன் பெறலாம். கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப 10 முதல் 20 சம தவணைகள் என திருப்பிச் செலுத்தும் காலக் கெடு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் தவணையுடன் மாத சந்தாவையும் அவர் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும்.
[தொகு] பெண்களுக்குச் சம உரிமை
இப் பிரிவு முஸ்லிம்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் தொழும் அதே நேரத்தில் அதே மசூதியில், ஆனால் தனி இடத்தில் பெண்களும் தொழுகிறார்கள்.[தொகு] தனி வெண்ணிற உடை
தொழுகைக்கு ஆண்கள் தூய வெள்ளையில் குர்தா, பைஜாமா, மேல் கோட் போன்ற சாயா ஆடையும், தொப்பியும் அணிந்து வர வேண்டும்.15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக "ரிதா' எனப்படும் புர்கா அணிய வேண்டும். ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட எல்லா இஸ்லாமியப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். மொஹர்ரம் இவர்களுக்கு சிறப்புக்குரிய பண்டிகை. ஆண்டுதோறும் மதகுரு சையத்னாவின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
No comments:
Post a Comment