Saturday, October 1, 2011

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0

நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம்முடைய கணினியானது செயல் இழக்க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நேரிடும் அந்த நிலையில் நம்முடைய வன்தட்டில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலையில் நாம் நமக்கு வேண்டிய பைல்களை தனியே தேர்வு செய்து சிடி/டிவீடி அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் பேக்அப் செய்து கொள்வோம். அவ்வாறு இல்லாமல் வன்தட்டில் குறிப்பிட்ட பார்ட்டிசியனை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் பேக்அப் செய்து கொள்ள முடியும் வேண்டுமெனில் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், நிறுவும்போது கீ கேட்டும் அப்போது முந்தைய அப்ஷனை தேர்வு செய்து GetProductkey என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து ரிஜிஸ்டர் செய்தபின் உங்களுக்கான கீயானது உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும், பின் நீங்கள் முழுமையாக இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பார்ட்டிசியனை பார்மெட் மற்றும் டெலிட் செய்து கொள்ளவும் முடியும். வேண்டுமெனில் பார்ட்டிசியன்களை மறைத்து வைத்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளானது NTFS (v1.2, v3.0, v3.1), FAT16, FAT32, Linux Ext2FS, Linux Ext3FS, Linux Swap, HPFS ஆகிய பைல் சிஸ்ட்டங்களை சப்போர்ட் செய்யும். 

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமான Xp,Vista,7 போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். பேக்அப் செய்ய கூடிய டேட்டாவினை ப்ளாஷ் ட்ரைவில் தொடங்கி சிடி/டிவிடிக்களில் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் USB 2.0 வினை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டேட்டாவினை பேக்அப் செய்ய முதலில் Backup என்னும் பட்டியை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும், பின் எந்த ட்ரைவ் என்பதை தேர்வு செய்யவும், பின் டேட்டாவினை எந்த ட்ரைவில் பதிய வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும், அடுத்ததாக Finish என்ற பட்டனை அழுத்தவும். கடைசியாக Apply பட்டனை அழுத்தவும். தற்போது பேக்அப் ப்ராசஸ் நடைபெறும் , சிறிது நேரத்தில் முற்றுபெறும். பின் நீங்கள் பேக்அப் செய்த டேட்டாவினை தனியே சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதே போல்தான் ரீஸ்டோரும் செய்ய வேண்டும்.

பொது அறிவு வினா-விடைகள் -2

1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? விடை: ஸ்புட்னிக் 1.
2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?விடை: Save Our Soul.
3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?விடை: அக்டோபர் 1.
4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?விடை: கிவி.
5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?விடை: வைரஸ்.
6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?விடை: தண்ணீர்.
7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?விடை: மார்ச் 21.
8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?விடை: ஓடோமீட்டர்.
10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?விடை: கிரண்ட்டப்.

இந்தியாவின் தேசிய சின்னம் எது?


:?:
அமெரிக்காவின் தேசிய சின்னம் எது?
தங்கம் கழி


:?:
கனடாவின் தேசிய சின்னன் எது?
வெள்ளை அல்லி


:?:
பங்களாதேஷின் தேசிய சின்னம் எது?
நீர் அல்லி


:?:
நார்வேயின் தேசிய சின்னம் எது?
சிங்கம்


:?:
ஜப்பானின் தேசிய சின்னம் எது?
கிறிசந்திமம்


:?:
ஜெர்மனியின் தேசிய சின்னம் எது?
தானிப்பூ


:?:
பாகிஸ்தானின் தேசிய சின்னம் எது?
பிறை


Image

:?:
ஈரானின் தேசிய சின்னம் எது?
ரோஜா


:?:
ஸ்பெயினின் தேசிய சின்னம் எது?
கழுகு


:?:
ஆஸ்த்ரேலியாவின் தேசிய சின்னம் எது?
கங்காரு


:?:
துருக்கியின் தேசிய சின்னம் எது?
பிரியும் நட்சத்திரமும்


:?:
பிரான்சின் தேசிய சின்னம் எது?
அல்லி



Image


:?:
டென்மார்க்கின் தேசிய சின்னம் எது?
கடற்கரை


:?:
இஸ்ரேலின் தேசிய சின்னம் எது?
மெழுகுவர்த்தி தாங்கி


:?:
ஹாங்கங்கின் தேசிய சின்னம் எது?
போகினியா (ஆர்ட்சிட் மரம்)
சிங்கங்கள் முகப்பு

குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்பு

"சுவர்க்க நகைகள்" குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்புதிருமணத்தை எதிர்நோக்கி வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கான மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த பயனுள்ள படிப்பு.தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், உலமாக்களின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற படிப்பு.
அல்லாஹ் நாடிய ஒருவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 5000/-இன்றே உங்கள் பிள்ளைகளையும் இப்படிப்பில் இணையுங்கள்12 வயதுக்கு மேற்பட்டு தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. வீட்டிலிருந்தே படித்து, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம். வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை.

இரண்டு வருடப்படிப்பு,

படிப்புக்கட்டணம் ரூ. 100/- மட்டும்.

பாடத்திட்டம்:

இந்த படிப்பு இருபாலருக்கும் பொதுவானது. பெண்களுக்காக சில சிறப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இஸ்லாம்: குரான், ஹதீஸ், ஷரீஅத், சட்டம் பற்றிய பாடங்கள், குடும்பம், தொழிலில் எற்படும் நெருக்கடி, குழப்பம் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண குரான், ஹதீஸ் கூறும் பரிகாரமுறைகள்:

மகளிர் மருத்துவம் : வயதுக்கு வந்ததிலிருந்து திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பருவ கால இடர்பாடுகள் - பரிகார முறைகள், உடல் ஊனம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பிறப்பை தடுப்பதற்க்கான வழி முறைகள், கர்ப்ப கால - பிரசவ கால பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய மருத்துவ நிபுணர்களின் அரிய ஆலோசனைகள்.

குடும்ப இயல்: குடும்ப நிர்வாக இயல், மாமியார், நாத்தனாரிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆலோசனைகள், பிள்ளைகளை அறிவாளிகளாக வளர்க்க கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள், பிள்ளைகளை உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்க வைக்க, கல்வி நிறுவனங்களின், படிப்பு, அங்குள்ள படிப்பில் சேரும் முறை,
தகுதிகள் பற்றிய விரிவான விபரங்கள், அழகுக்கலை, சமையல்கலை மற்றும் ஏராளமான பொது அறிவுப் பாடங்கள்.

சுவர்க்க நகைகள் பற்றிய மேல் விபரங்கள்

இந்தப் படிப்பு ஸுன்னத்வல்ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் அனைவருக்கும் பொதுவான படிப்பாகும். கொள்கை வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் சம்பந்தமான எந்த விசயங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்றையச் சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தீனை நினைவு படுத்திக் கொண்டிருப்பது அவர்களது ஈருலக் பாதுகாப்புக்கு் நல்லது.

வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

படிப்புக் கட்டணத்தை ஊரிலிருந்து M.O.மூலம் ஜாமிஆவுக்கு அனுப்பி வைக்கலாம்.

ஜாமிஆ மில்லியா கமாலியா
(இஸ்லாமியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்)
GOLDEN CITY, PERIYAKULAM - 625601 THENI Dt.
cell : 95664 63856  Email : kamaaliya@gmail.com

பொது அறிவு வினா - விடைகள்

1.பசுமைப்புரட்சிக்கு காரணமான பயிர் எது ?
2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?
3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?


பதில்கள்:
1.கோதுமை
2.மேற்கு வங்காளம்
3.உதடுகள்
4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது
5.கழுகு
6.இலங்கை
7.48 நாட்கள்
8.இலுப்பை
9.பஞ்சாப் நேஷனல் பேங்க்
10.கொல்கத்தா

Friday, September 30, 2011

நான் ஒரு சிறு பிள்ளை....




அன்புக்கு அடையாளம் காட்டும்
என் இனிய பெற்றோரே!
என் செய்கை,
என் அடம்,
என் சேட்டை,
நான் தரும் கரைச்சல்கள்......
சில நேரங்களில்
சலிக்க உங்களைச் செய்யும்.
சில  வேளைகளில்
சினம் கொள்ள வைக்கும்.
என்றாலும்...
நான் ஒரு சிறு பிள்ளை....
உங்களின் பிள்ளை இல்லையே?
 
சின்னஞ்சிறிய இந்தக்
கால்களின் தடங்களும்,
கைகளின் பதிவுகளும்......
பின்னொரு நாளில்
எண்ணிப் பார்க்கையிலே
புன்சிரிப்பைச் சுமந்து தரும்!


காலக்  கண்ணாடியில்
கடக்கும் இந்தக் காலங்களை
மனக் கண்ணோரம் இனிதே
மீட்டிடும் போதினிலே....
இமையோரம் களிப்போடு
கசியும் கண்ணீரும்,
இதழோரம் இழையோடும்
இனிய புன்முறுவலும்;
போட்டிக்கு வாராவோ?


உங்கள் பாதுகாவலிலும், பரிவிலும்,
தங்கி வளரும் தவ்வல் நான்.
நான்,எனக்கு,எனது என்று மட்டுமே
நினைக்க எனக்கு வருகிறதே!
என்னைச்சுற்றியே எல்லாம்
என்றே எனக்கு தெரிகிறதே!
தன்னலமே முன்னணியில்
தலையாட்டும் பருவம்
இன்றையநாளில்  என்னதன்றோ?
என்னை வளரும்  வழிகாட்டி
முன்னேற்றிட வேண்டிய   
என் உலகத்தின் முதல் உறவே!
என் புரளி குழப்படிகளுக்குத்
தண்டனையாக உடல்வலியை
தயைசெய்து தந்திட வேண்டாமே!


 பிடிவாதத்துக்கு
அடி மருந்தாக அமைந்திடாதே!
அடி ஒரு கணக்கில்
பழக்கமான ஒரு
நட்பாகிடக் கூடும்.
சொன்ன சொல் மாறாமல்
தன்னிலை தளும்பாமல்
வகுத்திடும் எல்லைகள்
வளர்த்திடும் கொள்கைகள் என்னைத்
தடுமாற்றம் இன்றி
நடமாட வைக்கும்.


அரியண்டம் தாங்கேலாமல்
ஒருகணம் அடித்து;
அழுத கண்ணீர் கண்டு
மறுகணம் அன்பால் துடித்து;
இளகும் உங்கள் மனமும்,
தளரும் கொள்கை வேலிகளும்;
நான் செய்வதே சரி
என என்னை எண்ணிடப் பழக்கும்.


அடியும் திட்டும் என்னை
சரி பிழை பற்றி ஆராயும் அறிவற்ற,
அடிக்கு அடங்கும் அடிமையாக
வசைக்கும், வாய்ச்சாலத்துக்கும்
வசைந்து போகும் வீணனாக,
ஆக்கிடாதோ? அதுவோ உம் ஆசை?


பிள்ளையார் பிடிக்க
உள்ளத்தால் உள்ளுகின்றீர்!
குரங்காக அது
உரு மாறுவது சிலநேரம்.
பிள்ளைமனம் பற்றி
எள்ளளவும் எண்ணாமல்
பிள்ளைவளர்ப்பில் அடித்தல் என்பது
பின்னிப்பிணைந்தது என்றே
பிழையாக உன்னுகின்றீர்!




பிள்ளை என்றாலும்  இந்தப்
பிஞ்சு நெஞ்சுக்கும்
வெக்கமும், துக்கமும் உண்டன்றோ?
நொந்த உடலும்,வெந்த மனமும்;
சிந்தையில் கசப்பை பதிந்திடாதோ?
எந்த நாளிலும் எண்ணும் போதெல்லாம்
எரிச்சலைக் கொதியை கிளப்பிடாதோ?


பின்னொரு   காலத்தில்
பெற்றோருடன் எனக்கிசைந்த
சீவியம் இதனை நான்
சிந்திக்கும்  போதினிலே
ஆவியும் அகமும் மகிழ்வுற நான்
அசைந்திட வேண்டும்.
இன்பத்தின் நினைவில்
இசைத்திட வேண்டும்!
எந்தன் எண்ணங்களும்
உங்கள் ஆசைகளும் ஒன்றாக
இசைந்திட வேண்டும்!
இசைவீரோ?
என் பிறவிக்கு உறவான
என் இனியோரே!

நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்கு காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை நீங்கள் அவனை (தஜ்ஜாலை) சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகை கடமையாகுதல்!

103- நான் இறை இல்லம் கஃபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விளிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காரை எழும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பபட்டது. கோவேறுக் கழுதையை விட சிறியதும் கழுதையை விட பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன்.

முதல் வானத்தை நாங்கள் அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச்சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்து. ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவு ஆகுக என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாகங்கள் சென்றோம். யார் அது என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதிலளிக்க உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆள்அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம் யார் அது என்று கேட்கப்பட்டது, ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், சகோரரும் நபியுமான உங்களின் வரவு நல்வரவாகட்டும், என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது, முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன்,அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஜந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை, என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை)அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது,ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது.முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வருகை நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.அவர் இறைவா! என் சமுதாயத்தினரில் சுவர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சுவர்க்கம் புகுவார்கள்,என்று பதிலித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள், மகனும் நபியுமான உங்கள் வரவு நல்லவரவாகட்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள்.அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன.(ஸல்ஸபீல்,கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சுவர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஜம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஜம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஜந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய்? என்று கேட்க, அதை இறைவன் ஜந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள்.அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஜந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஜம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



புகாரி 3239: இப்னு அப்பாஸ் (ரலி)

இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்

வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்..

53. நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று கூறினார்கள்.
புகாரி :4477 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)

பெரும் பாவங்கள் குறித்து..
54- (ஒரு முறை)பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் (மூன்றுமுறை)கேட்டார்கள். மக்கள்,ஆம் அல்லாஹ்வின்தூதரே!(அறிவியுங்கள்)என்று சொன்னார்கள். உடனேநபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்(தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி-2654: அபூபக்ரா(ரலி)

55- நபி(ஸல்)அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக்கேட்கப்பட்டது. நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றொருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறினார்கள்.
புகாரி-2653: அனஸ்(ரலி)

56- அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நுபி(ஸல்)அவர்கள்,அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது எனஅல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஒடுவதும்,அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட,கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்(அந்தப் பெரும் பாவங்கள்)என்று பதில் கூறினார்கள்.
புகாரி-2766: அபூஹுரைரா(ரலி)

57-ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி(ஸல்)அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார், உடனே(பதிலுக்கு)அவர் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார்.(ஆக,தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.
புகாரி-5973: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)


இணைவைக்காது மரணித்தோர் சுவனில்..
58- யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார், என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன்.
புகாரி-1238: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி)

59- எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உடனே நான்,அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக்கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1237: அபூதர்(ரலி)

60- நபி(ஸல்)அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொணடபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹவைத் தவிர வேறெவரும் இல்லை)என்று சொல்லி பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகந்தே தீருவார், என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். நான் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக)அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திரடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்)அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!(அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)என்று கூறினார்கள்.

அபூதர்(ரலி)அவர்கள் இதை அறிவிக்கும் போது அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே, என்று கூறிவந்தார்கள்.
புகாரி-5827: அபூதர்(ரலி)

வணக்கத்திற்குறிய நாயன் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒரு நிராகரிப்பவன் வாயால் மொழிந்த பின் அவனைக் கொல்வது பற்றி..
61- பனூ ஸூஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடம், இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு, அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, அல்லாஹ்வுக்கும் கீழ்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின்தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்தூதர் நபி(ஸல்)அவர்கள்,(வேண்டாம்) அவனைக் கொல்லாதே என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி)அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்! என்றுகேட்க, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள்,அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த(குற்றமற்ற)நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த(குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய், என்று கூறினார்கள்.
புகாரி-4019: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்(ரஹ்)

62- எங்களை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம்.(அவர்களுடன் நடந்த சண்டையில்)அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் -லா இலாஹ இல்லல்லாஹ்- அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி)வந்தபோது நபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், உஸாமாவே! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவ வாக்கியத்தை)மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்? என்று கேட்டார்கள். நான் (நாங்கள் அவரைக் கொன்று விடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார் என்று சொன்னேன்.(ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்)அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே,(பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.
புகாரி-4269: உஸாமா பின் ஸைத்(ரலி)